கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 30 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் வைத்தியசாலையின் விடுதி , பிரிவுகளின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி தேவைகளை இனம் காணப்பட்டதற்கு அமைவாக உபகரணங்களை விரைவாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.


அந்த வகையில் மிக முக்கியதேவையான சில உபகரணங்கள் ஏற்கனவே பெற்று கையளிக்கப்பட்டிருந்தது. இன்று (9) சுகாதார திணைக்கள நிதி ஒதுக்கீட்டில் 30 மில்லியன் பெறுமதியான 2ம் கட்ட உபகரணங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


“சிறந்த உபகரணங்கள் சிறந்த சேவைக்கு வழிகாட்டி” என்ற கருத்திற்கு அமைவாக இச்சேவை தொடர்கிறது எனலாம். இதனால் சிறந்த சேவையை வழங்கும் சேவையாளர்களின் சேவையை மேம்படுத்தவும், சேவைகளை பெறும் சேவைநாடிகளுக்கான வசதிகளை அதிகரித்து, அசௌகரியங்களை தவிர்ப்பதற்கும் வழிவகுக்கும் என நம்பப்படுகின்றது.
பொது மக்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டத்தினால் இவ்வைத்திய சாலையை நாடி வரும் மக்கள் பயன் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.