நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தான் கட்டுப்பட்டிருப்பதாகவும், தற்போதைய அரசு ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த அரசைத்
தெரிவு செய்து மக்கள் வைத்துள்ள அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியத் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை,சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல்,
செயற்றிறனான அரச சேவையை ஏற்படுத்துதல் மற்றும் மோசடி மற்றும்
ஊழலை முடிவுக்குக் கொண்டுவருதல், போதைப்பொருட்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் ஒரு வருட குறுகிய காலத்தில் ஒரு சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் தற்போதைய அரசு ஒரு தீர்க்கமான திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது . அனைத்து துறைகளிலும் இந்த சாதனைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படுமே தவிர எக்காரணம் கொண்டும் திருப்பியமைக்கப்படாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நேற்றுமுன்தினம் பிற்பகல் நியூயோர்க்கில் உள்ள ஸ்டெடன் ஐலண்ட் கலைக் கூடத்தில் நடைபெற்ற அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பில் பங் கேற்றபோது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.