ஈழத் தமிழ் கலைஞர்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் இன்று(07) பாண்டியிருப்பில் நடைபெற்றது.
ஈழத் தமிழ் கலைஞர்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் இன்று(07)காலை பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில், கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் செயலாளர் ஆசிரிய ஆலோசகர் கா. சாந்தகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
ஈழத்தமிழ் கலைஞர்கள் ஒன்றியத்தின் தலைவர் கலைஞர், டாக்டர் சிவசுதன் இவ் ஒன்றுகூடலை நெறிப்படுத்தினார். ஒன்று கூடலுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து. பல்வேறு கலைத்துறைகளையும் சார்ந்த. கலைஞர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம். கிளிநொச்சி, முல்லைது;தீவு, மன்னார் வவுனியா போன்ற பகுதிகளிலும் மலையகம் , மற்றும் கிழக்கின் திருகோணமலை. மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளையும் சார்ந்த கலைஞர்கள் வருகைதந்திருந்தனர்.
மருகி வருகின்ற அல்லது அழிந்து வருகின்ற எமது பழம்பெரும் தமிழ் பண்பாட்டை மேன்மைப்படுத்தக்கூடிய கலையை தொடர்ச்சியாக எமது வளரும் சமூகத்தினருPடையே கொண்டு சேர்க்கும் நோக்கோடு இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது தொடர்பான ஒரு கலந்துரையாடலாக இன்றைய ஒன்று கூடல் அமைந்திருந்தது
இதற்காக வருகை தந்த கலைஞர்களிடமிருந்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதோடு இதனை எதிர்காலத்தில் செயல்படுத்துவதற்கான தற்காலிகமான ஒரு குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. எதிர்காலத்தில் தொடர்ச்சியாக வளர்ந்து வருகின்ற புதிய இளம் கலைஞர்களையும் ஒன்று சேர்த்துக்கொண்டு எமது இலக்கை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலகங்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற ச. நவநீதன் அவர்களும் , மூத்த இலக்கியவியலாளர் செங்கதிரோன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.