யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் இன்று (7) இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது. கல்முனை ஆதார வைத்தியசாலை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் இடம் பெற்ற இரத்ததான முகாமில் பிரதேச செயலக ஊழியர்கள் பொதுமக்கள் என அதிகளவானோர் பங்குபற்றி குருதிக்கொடை வழங்கினர்.

படங்கள் – மாதவராஜா நிதுர்ஷன்