49 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திரு.S. பாலுராஜ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையின் கீழ் வெகு சிறப்பாக நேற்று கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் அவரது தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்ததோடு அவரைப் பாராட்டி உடற்கல்வி ஆசிரியர்களினால் வாழ்துப்பா ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது மேலும் அவரினால் மாணவர்களுக்கு அனுபவப பகிர்வானது வழங்கி வைககப்பட்டது. பாடசாலையின் அதிபர் அவர்களினால் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டதோடு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குறித்த நிகழ்வினை சிறப்பாக நடாத்துவற்கு உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டுக்களையும், நன்றிகளை தெரிவித்தனர்
49 வருடங்களிள் JKMO கராத்தே சங்க மாணவன் எஸ்.பாலுராஜ் KATA போட்டியில் கிழக்கு மாகாணத்தில் 10வது தங்கப்பதக்கத்தினையும், 05வது முறையும் BEST PLAYER விருதையும் தனதாக்கிகொண்டு கிழக்கு மாகாணத்திட்கும், தான் கடமைபுரியும் பாடசாலை Carmel Fatima College பெருமை பெற்றுக்கொடுத்துள்ளார்.
தேசிய விளையாட்டு விழாவானது காலியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 18 19 20ஆம் திகதிகளில் நடைபெற்றது.
நடைபெற்ற போட்டிகளில் கிழக்கு மாகாணத்திற்கு 02 தங்கம் 02 பித்தளை பதக்கங்கள் கிடைக்கப்பெற்றன.
இதில் 35 வயதுடைய JKMO கராத்தே மாணவன் எஸ்.பாலுராஜ் KATA போட்டியில் 10 வது தடவையும் தங்கம் வென்றுள்ளார்.
இவருக்கான பயிற்சிகளை JKMO கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் S.முருகேந்திரன்(Eng) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










