காரைதீவு அதிர்ந்தது விழாக்கோலம் பூண்ட விபுலானந்தாவின் மாபெரும் பவளவிழா நடைபவனி!!

(  வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனி நேற்று  ( 16 ) சனிக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதனையொட்டி முழுக் காரைதீவுக் கிராமமே விழாக் கோலம் பூண்டது. அதிரும் இசைஒலிகளால் காரைதீவு அதிர்ந்தது.

கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற  இம் மாபெரும் பவளவிழா நடைபவனியில் 43 வருட மாணவர் அணியினர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் சகிதம் தனித்துவமான சீருடையுடன் கலந்து கொண்டனர். டிஜே இசை வாகனங்கள் பவனியை அமர்க்களப்படுத்தின.

“விபுலத்தால் ஒன்றிணைந்துயர்வோம்”  என்ற மகுடத்தின் கீழ் நடைபெற்ற இந் நடைபவனிக்கு ,

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளரும் பழைய மாணவருமான எஸ்.

புவனேந்திரன் கலந்து சிறப்பித்தார்.

சங்கத்தின் தலைவரும் ,கல்லூரி அதிபருமான ம.சுந்தரராஜன் தலைமையிலும்

 பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகரும், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜாவின் ஆலோசனையிலும் 

நடைபெற்ற இந் நிகழ்வில், முன்னதாக 

கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன், கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஆ.சஞ்சீவன், முன்னாள் அதிபர் பேராசிரியர் சி.அருள்மொழி ஆகியோர் தேசிய, வலய, கோட்ட, பாடசாலை, பவளவிழா கொடிகளை ஏற்றி வைத்தார்கள்.

 கல்லூரியில் பயின்று  உயர்நிலையில் இருக்கின்ற பேராளர்கள் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் நட்சத்திர அதிதிகளாக அனைவரும் கலந்து கொண்டனர் .

 விபுலானந்தா மத்திய கல்லூரியின் மைதானத்தில் இருந்து ஆரம்பமாகிய நடைபவனி காரைதீவிற்குள் மட்டுப்படுத்தப்பட்டு பிற்பகல் ஒரு மணியளவில் நிறைவடைந்தது.

சிறந்த முதல் மூன்று அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பழைய மாணவர் சங்கத்தின் தலைவர், ஆலோசகர்,செயலாளர் லோ.சுலக்ஷன், பதில் பொருளாளர் வி.குகனேந்திரராஜா, உப செயலாளர் எஸ்.டனிஸ்காந்த், உள்ளிட்ட நிருவாக சபையினர்  நடைமுறைத்தினர்.