Dr.சுஜன் சுகுமாரன் பதிவில் இருந்து

உங்களை ஏன் இத்தைனை பேருக்கு இப்படி பிடித்து விட்டது. உங்களை யார் என்றே அறியாதோர் கூட எதற்காய் உங்களிற்காய் அழுகிறார்கள் . பல நூறு சத்திர சிகிச்சை நிபுணர்களும் , மருத்துவர்களும் எதற்காய் உங்களை “ சத்திர சிகிச்சையின் இமயம் . மாபெரும் நிபுணன் “ என அழைக்கிறார்கள் . இந்த அடை மொழிகள் எல்லாம் எழிதில் கிடைத்து விடக்கூடியதா?

திருமலையில் கல்வி பயின்று கொழும்பிலே மருத்துவ பட்டப்படிப்பை பெற்ற எனக்கும் யாழ் மண்ணுக்கும் எந்த பந்தமும் இல்லை . அந்த இணைப்பு உங்களிற்காக வந்தது தான். கொழும்பிலே படித்து வெளியேறிய பல நூறு வைத்தியர்களை யாழ் மண்ணை நோக்கி ஓடி வர வைத்தது உங்கள் ஈர்ப்பு விசைதான் .

அந்த நாட்களில் உங்களை எனக்கு யார் என்றே தெரியாது . என் senior ஒருவர் உங்ளை பற்றி , உங்கள் சத்திர சிகிச்சைகளின் அதி நுட்பம் பற்றி , உங்கள் discipline பற்றி வேறு ஒரு senior ற்கு கூறிக்கொண்டு இருப்பதை ஏதோ ஓர் படக்கதை போல் கேட்டு கொண்டிருந்த நாளே உங்களை ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுளே ஏற்படுத்தியது.

நான் ஆசைப்பட்டது போன்றே 2024.04.30 . உங்கள் house officer ஆக ward 27 இலே உங்களை சந்த்தித்தேன் . நாட்கள் செல்ல செல்ல நான் இவர்கள் கதைகளில் கூறி அறிந்ததை விட நீங்கள் பல மடங்கு தனித்துவம் ஆனவர் என அறிந்து கொண்டேன் .

சத்திர சிகிச்சை கூடத்திலே உங்கள் laparoscopic surgery ஐ பார்பதற்கே ஓர் ரசிகர் கூட்டம் உண்டு . பக்கத்து theatre ல இருந்து கூட அண்ணாக்கள் உங்கட surgery ஐ பாக்க theatre F கு வந்து நிற்கும் காட்சி இன்னும் எங்கள் கண்களிலே உள்ளது . பெரிய சத்திர சிகிச்சைகளின் போது கூட தேவை இல்லாமல் உங்கள் கைகள் அசைந்தது இல்லை . நீங்கள் பதற்றமானதை நான் பார்த்ததே இல்லையே . ஆக சிக்கலான தருணங்களில் “ hay . Centralize “ “ என்ன செய்றீங்கள் எண்டு தெரியல “ ena SR ஐ பார்த்து அமைதியான தொனியில் சொல்வது மட்டுமே உங்கள் கோபத்தின் உச்ச வெளிப்பாடு “ என்பதே வியப்பாக இருக்கும்.
மிகப்பெரிய சத்திர சிகிச்சைகள் கூட ( thoraco -laparoscopic esophagectomy , laparoscopic assisted whipple procedure, laparoscopic total colectomy etc etc ) மிக அமைதியாக சில மணி நேரங்களிலே முடிந்து விடுவது எல்லம் நம்ப முடியாமலும் உங்கள் மேலான மதிப்பை பல மடங்கையும் உயர்த்தி விடும் .

Ward round களில் ஒரு வேளை நாங்கள் தவறு செய்தினும் கூட பிறர் முன்பு அதை சொல்லி காட்டியதே இல்லை . ஆனால் நீங்கள் ward இல் நுழையும் போது ஏதோ ஓர் பதற்றம் மனதிலே ஒட்டிக்கொள்ளும் . அது உங்கள் மீதான மிகப்பெரிய மரியாதையால் வந்த ஒன்று . அப்படி ஒரு professionalism நீங்கள் . நடு இரவு 12 மணி ஆயினும் கூட கழுத்தில் Tie உடன் வந்து சரளமாக ஆங்கிலத்தில் மட்டுமே எங்களுடன் உரையாடும் உங்கள் perfect professionalism அவ்வளவு அழகு . எந்த நிலையிலும் நோயளர்கள் மீது உயர் தொனியில் பேசாத உயரிய பண்பை உங்களிடத்தில் இருந்து தான் கற்றுக்கொண்டோம் .

நீங்கள் உருவாக்கியது சத்திர சிகிச்சையின் மிகப்பெரிய சம்ராஜ்யம் . அது எவ்வளவு ஆழமானது என்பதை வைத்தியர்கள் அறிவார்கள் .

நீங்கள் ஓய்வு பெறவே இன்னும் 14 வருடங்களிற்கு மேல் உள்ளதே . அத்தனை வருடத்தில் நீங்கள் சத்திர சிகிச்சையில் கொண்டுவர காத்திருந்த எத்தனையோ மாற்றங்கள் இன்று அனாதரவாய் கிடக்கிறதே . அன்று காலை புதன் கிழமை நீங்கள் செய்த ward round தான் உங்கள் இறுதி ward round என்று அன்று தெரியாமலே அது முடிந்து விட்டதே . சனிக்கிழமை திரும்பி வருவேன் என byd car இல் கம்பீரமாக சென்ற நீங்கள் இனி வரப்போவதே இல்லை என்பதே இன்று மிகப்பெரிய மன வேதனையாக உள்ளது .
நீங்கள் வாழ்ந்து இருக்க வேண்டும் . ஏன் எனில் உங்கள் உயிர் என்பது உங்களிற்கு தேவை என்பதை விட அது எமக்கான , எம் மக்களிற்கான , நாட்டிற்கான உயிர் . உங்கள் வெற்றிடம் மிக இலகுவிக் ஈடு செய்யப்பட முடியவே முடியாது .
ஆயிரம் கண்கள் பட்டு விட்டது சேர்💔

My Sir . My boss❤️💔