கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஒரு வருட கால எல்லையைக் கொண்டு இடம் பெற்று வருகின்றன.
அந்த வகையில் நடை பவனிமிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்று வருகிறது. இன்று (17) காலை 8.30 மணியளவில் ஆரம்பமான நடை பவனி வடிவமைக்கப்பட்ட வாகன ஊர்வலங்களுடன் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் , பாடசாலை நலன் விரும்பிகள் என ஆயிரக்கணக்கானவர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.
வடிவமைக்கப்பட்ட ஊர்திகள் பெருமளவானோரின் பங்குபற்றுதலுடன் கல்முனை பிரதேசத்தின் கிராமங்களின் பிரதானமான வீதிகளூடாக பவனி வந்ததுடன் உலங்கு வானூர்தீயும் கடலில் வள்ளங்களும் பாடசாலை கொடிகளை தாங்கி வலம் வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
புகைப்படங்களை பார்வையிட
https://www.facebook.com/share/p/1BLdAHkYyJ