இலங்கை வரலாற்றில் பதியப்பட்ட கல்முனை கார்மேல் பற்றிமாவின் முன்மாதிரியான நிகழ்வு; ” ஒரு பாடசாலை மற்றும் ஒரு பாடசாலைக்கு உதவுதல்” சிறப்பு செயல்திட்டம் –
பிரபா
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக பாடசாலையின் ”JUBILEE” குழுவினால் பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில்” ஒரு பாடசாலை மற்றும் ஒரு பாடசாலைக்கு உதவுதல்” எனும் சிறப்பு வேலைத் திட்டம் நேற்றையதினம் (26) முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை சது வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் குறைபாடுகளாக காணப்பட்ட பல விடயங்களை இனம் கண்டு அவற்றினை ஓரளவேனும் நிவர்த்தி செய்யும் நோக்கோடு இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கல்முனையில் இருந்து சென்ற கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் அதிபர் அருட் சகோ ச. இ.ரெஜினோல்ட் தலைமையிலான Jubilee குழுவினரை சது/ வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி. ஜெ. ரசிகரன் தலைமையிலான பாடசாலை சமூகம் வரவேற்று கௌரவித்தது.
பற்றிமாமா தேசிய பாடசாலையின் Jubilee குழுவினரால் அப் பாடசாலைக்கு தேவையாக காணப்பட்ட சிறுவர் பூங்கா புனரமைப்பு, மாணவர்களுக்கான விளையாட்டு உபகரனங்கள் வழங்குதல், மாணவர்களுக்கான கற்றல் உபகரங்கள் வழங்குதல்,ஆசிரியர், மாணவர்களுக்கான தளபாடங்கள் வழங்குதல், அத்தோடு அங்கு சேவை அடிப்படையிலேயே கற்பித்த விஞ்ஞான ஆசிரியருக்கான மாதாந்த கொடுப்பனவினை வழங்குதல் ,(ஒரு வருடம்.) உட்பட பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மேலும் அப்பாடசாலையிலே கல்வி ரீதியாக நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஒரு தீர்வாக விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், போன்ற பாடங்களை பிரத்தியேகமாக பகுதி நேரமாக கற்பிற்பதற்கு ஆசிரியர்களையும் பற்றிமா தேசிய பாடசாலையிலிருந்து வழங்கி தொடர்ச்சியாக அங்கு வகுப்புகளை நடத்துவதெனவும் பாடசாலை சமூகத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
வீரச்சோலை பாடசாலை சமூகம் மட்டுமல்ல கிராம மக்கள் அனைவரும் இவ்வாரான ஒரு செயற்பாட்டை முன்னெடுத்ததையிட்டு பெருமகிழ்ச்சி கொண்டனர்.
ஒரு பாடசாலை தனது கல்வி சம்பந்தப்பட்ட அல்லது தனது பாடசாலைகளில் இருக்கின்ற பாடசாலை குறை தொடர்பாக செயல்படுமே தவிர இன்னும் ஒரு பாடசாலைக்கு உதவியது இதுவே முதல் தடவையாகும் .அனைத்து பாடசாலைக்கும் ஒரு முன்னுதாரணமான செயற்பாடாக கல்முனை பற்றிமா தேசிய பாடசாலையின் Jubilee குழுவினர் முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


























