கல்முனை பற்றிமாவில் 07 மருத்துவம் ; 13 பொறியியல்; மொத்தம் 128மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி

( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கில் பூகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நேற்று வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி 128  மாணவர்கள்  பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

07 மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் 13 மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை வலயத்தில் தனி ஒரு பாடசாலை இவ்வாறு  கூடுதலாக பெற்றது இப் பாடசாலையில் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி அதிபர் அருட்சகோ. எஸ்.இ.றெஜினோல்ட் கூறுகையில்..

எமது பாடசாலையில் இதுவரை 128 மாணவர்கள்  பல்கலைக்கழகத்திற்கு தகுதி  பெற்றுள்ளார்கள். 

அதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகள் கூறுகிறேன் என்றார்.