கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையானது சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் அதை வேளை ஜனாதிபதி சுற்றாடல் விருதுகளை தொடர்ச்சியாக பெற்று வருகின்றது.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு பாராட்டு சான்றிதழையும் 2021, 2022 ஆம் ஆண்டுக்கான மெரிட் விருதினையும், இம்முறை ஜனாதிபதி சுற்றாடல் விருது 2024 இல் வெள்ளி விருதினையும் பெற்றுக் கொண்டது.

இவ்விருது வழங்கும் வைபவம் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட BMICH மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 28. 06.2024 மிகச் சிறப்பான முறையில் இடம் பெற்றது. இவ்விருதினை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி APRS சந்திரசேன அவர்கள் பெற்றுக்கொண்டார்