( வி.ரி.சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்றுபிரதேச செயலகமானது 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் போட்டியில் அரச நிறுவனங்களுக்கான பிரிவில் பங்குபற்றி
‘வெள்ளி விருதினை’ பெற்றுக்கொண்டது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று
இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் இவ்விருதை
கௌரவ அதிதியான சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
நாடாளவிய ரீதியில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள், பொது அமைப்புக்கள் என 902 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் அவற்றுக்குள்
தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.