பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக சேவையாளரான, கனடாவில் வசிக்கும் விசு கணபதிப்பிள்ளையின் நிதிப்பங்களிப்பில் கமு\பெரியநீலாவனண விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கற்றல் ஊக்குவிப்பு பணியாக பாடசாலை அதிபர் S. குணராஜா தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் 1ம் தவணை பரிட்சையில் 1ம்,2ம்,3ம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி அறிக்கையும் ,பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் அதிதிகளாக பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் திருமதி நிரஞ்சனா தயாபரன்,ஓய்வு பெற்ற பிரதிக்கல்வி பணிப்பாளர்(தமிழ்) வரதராஜன் ,ஓய்வு பெற்ற அதிபர் அக்கரை பாக்கியன் ,பெடோ அமைப்பின் பிரதிநிகள் போன்றோர் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.