நாவிதன்வெளி பிரதேச செயலக திட்டமிடல் பிரிவினால் “தவறினில்” குறும் திரைப்படம் வெளியீடு.

(பிரபா – பெரியநீலாவனை)

இன்றைய எமது சமூகத்தில் இளம் தலைமுறையினரிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது. பொதுவாக இளைஞர்கள் பாடசாலை மாணவர்கள் சிறுவர்கள் என இவ்வாறானவர்களை இலக்கு வைத்து போதைபொருள் வியாபாரிகளின் செயற்பாடுகளும் உள்ளது.


காவல் துறையினால் பல்வேறுபட்ட நடவடிக்கைகள்,கைதுகள் இடம்பெற்றாலும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த முடியவில்லை.
நாவிதனவெளி பிரதேச செயலக திட்டமிடல் பிரிவால்,நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜீந்திரன் அவர்களின் தயாரிப்பில்,”தவறினில்”
எனும் போதைபொருள் பாவனை தொடர்பாக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.


போதைப் பொருளின் தாக்கம் எனும் கருப் பொருளை மையமாக கொண்ட இத்திரைப்படம் நிச்சயமாக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விளையும் என்பதில் ஐயமில்லை.