கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த உழவு இயந்திரங்கள் வழங்கிவைத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!

நூருல் ஹுதா உமர் 

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகளை அகற்றவும் விவசாயத்தை மேம்படுத்தவும் ஆளுநர் செந்தில் தொண்டமானால் இயந்திரங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன், விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துபண்டா, பேரவை செயலாளர் ஏ.எல்.எம். பாயிஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.