ஒப்பீட்டளவில் ரணில் பிரச்சனைகளை தீர்ப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது – செல்வம் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சினைகளை உங்களால்தான் தீர்த்து
வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கின்றது என்று ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று
நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்குக் காணி உறுதி வழங்கும்
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஜனாதிபதி வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இந்த மாவட்டத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்களால்தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கின்றது.


இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுவை உங்கள் தலைமையில் நடத்தி முல்லைத்
தீவு மாவட்ட மக்களின் காணி உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும்.
காணி உறுதியில்லாத மேலும் பலர் உள்ளனர். சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. எங்களுடைய மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றேன்.’ – என்றார்.