இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதி நிதிகளுக்கான ஊடக கல்வியறிவு பயிற்சி பட்டறை

– யூ.கே. காலித்தீன் – 

மேற்படி நிகழ்வானது  நிந்தவூர் தோம்புக்கண்ட ஓய்வு விடுதியில் இன்று (29) இடம்பெற்றது 

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பயிற்சி இணைப்பாளரும் மற்றும் பயிற்றுவிப்பாளருமான கீர்த்திகா மகாலிங்கத்தின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இவ் பயிற்சி பட்டறையில் பிரதான வளவாளராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம  ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பத்திரிகை ஸ்தாபனத்தின் உதவி இணைப்பாளர் ஆர். அபிஷேக், அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்

You missed