திருகோணமலையில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்

ஹஸ்பர் ஏ.எச்_

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையானது கட்சியின் நிறுவனர் தந்தை செல்வநாயகம் அவர்களது 47 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவு எழுச்சி கூட்டமொன்றை இன்று (27) ஏற்பாடு செய்திருந்தனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட தலைவர் ச.குகதாசன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது  திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன்,எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You missed