கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ்
குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் நாடாளுமன்ற
உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி.கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுவது தொடர்பாகவும்இ கல்முனை வடக்கு பிரதேச செயலகநிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின்அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனைகணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில்நெருக்கடியான நிலைமைகளைஎதிர்கொள்கின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை
நியமிக்குமாறு கல்முனை வடக்க பிரதேச செயலகப் பகுதி மக்கள்
பல தசாப்தங்களாகக் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க
வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர்
நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில்இ
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனைவடக்கு பிரதேச செயலகத்தை உபகாரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல் முனைதெற்கு பிரதேச செயலாளரின ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோ
தமான செயற்பாடுகளாலும் தமிழ்இமுஸ்லிம் சமூகங்களுக்கு இடையில்முறுகல் நிலை உருவாகியுள்ளது.

கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில்அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர்
பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள்இகணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு
கோரியும்இ கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.

அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமானநடவடிக்கைகளும் எடுக்கப்பட
வில்லை. அவர்கள் 20 நாள்களைக்கடந்து போராட்டம் நடத்தி வரும்
நிலையில்இ எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்குதீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிலைமையை சீர்செய்ய
உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச
சேவைகளுக்கான அணுகல் இல்லாமைஇ முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது.

இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின்குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில்
உங்கள் தலையீடு முக்கியமானதுஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You missed