சித்திரை விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்துவதாக பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் அறிவிப்பு!

தமிழ் சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் இம்முறை விளையாட்டுப்போட்டிகள், களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதில்லை என இன்று (8) அறிவித்துள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அநீதியை கண்டித்து மக்கள் கடந்த 15 நாட்களாக சுட்டெரிக்கும் வெயலில் போராடி வரும் நிலையில், தாம் விளையாட்டு போட்டிகளை நடாத்துவது இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் என்பதால் தாம் இநத முடிவை எடுத்துள்ளதாக காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தினர் அறிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தாலும் அவற்றை நிறுத்துவதுடன் ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட அதிஷ்ட்ட இலாம சீட்டிலுப்பு மாத்திரம் குறித்த தினத்தில் குலுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.