கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு நீதிகோரிய போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் களத்தில் – வானை பிளந்தது கோஷம் – அரசே எமது அடிப்படை உரிமையை பெற்றுத்தா!


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கும், அநீதிகள் இழைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் இன்று (04) 11 ஆவது நாளாக  தொடர்கிறது. இன்றைய போராட்டத்தில் மேலும் வலுச்சேர்க்கும் வகையில்  கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம மக்கள் கொளுத்தும் வெயிலிலும் நடைபவனியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது அமைப்புக்கள் ,அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரிய போராட்டத்துக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.

https://www.facebook.com/kalmunainet/videos/438200872032238 – live

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கு தீர்வை பெற்று தர வேண்டும்

தொடர்புடைய செய்தி

You missed