கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 150 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் 150 விவசாயிகளுக்கு நீர் பம்பிகள் மற்றும் கிருமிநாசினி தெளிப்பான் போன்ற விவசாய உபகரணங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கின் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் I.K.G முத்துபண்டா உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

You missed