உரிமை மீட்க ஒன்றுபடுவோம் வாரீர்
……………………………………………………………..
கல்முனை தமிழர் உரிமை தமிழர் அதிகாரம் என்பன திட்டமிட்டு வலுவிழக்கச் செய்யும் சதிகளுக்கும் அதிகார அத்துமீறலுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தற்போது வலுப் பெற்றுள்ள நிலையில் . நாளை நமது உரிமையை வென்றெடுக்கும் உரிமைப் போராட்டத்தில் கல்முனையில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து நியாயமான போராட்டத்துக்கு வலு சேர்க்க இருக்கிறார்கள் . கல்முனை தமிழருக்கு இழைக்கப்படும் அநீதி ஒரு இனத்தின் மீது தொடுக்கப்படுகின்ற பாரிய அத்துமீறலாகும். பூர்வீகமாக வாழும் ஒரு சமூகத்தின் சமநிலையானது தவறுகின்ற போது சகலதும் அவலமாகும்.மனிதத்தன்மை கேள்விக்குறியாகும். பொறுமை காத்தால் உடைமை பறிபோகும். உரிமை காக்க வீறு கொண்டெழுவதே கடமை என புறப்படுங்கள்.

இனவாத தீய சக்திகளுக்கு எமது ஒற்றுமையை ஆயுதமாக்கி கல்முனை தமிழனின் நிலம் காப்போம் புறப்படுங்கள்.

கல்முனை தமிழனின் போராட்டம் முஸ்லிம் சமுகத்தின் மீதான போராட்டமாக காட்டவிளையும் தீய சக்திகளை தோலுரித்து சகோதரத்துவத்துடன் வாழும் இறைமையை புகட்ட புறப்படுவோம்.

ஒரு இனத்தை ஒடுக்கி அதற்கான நன்மைகள் கிடைப்பதை தடுக்கும் அதிகாரப் பயங்கரவாதம் ஒழிக்க புறப்படுவோம்.

இனியும் மௌனிக்காது புறப்படுவோம்

இடம் – கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்னால்

காலம் – நாளை 04/04/2024
நேரம் – காலை 9.00

You missed