ஓய்வுநிலை வடக்கு- கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரும், முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரியுமான செல்வி. திலகவதி பெரியதம்பி அம்மையார் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (31.03.2024) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். காலமாகும் போது அவருக்கு 82 வயது. 

விநாயகர் முதலியார் வீதி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அம்மையார் தனது ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் உயர்தரக் கல்வியை யாழ். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்றிருந்தார்.

இவர் பல்வேறு சமூகநல அமைப்புக்களில் இணைந்து சமூக சேவைகள் ஆற்றியுள்ளார்.     

அம்மையாரின் இறுதிக் கிரியைகள் நாளை திங்கட்கிழமை (01.04.2024) நண்பகல்-12.00 மணியளவில் பருத்தித்துறையில் அமைந்துள்ள அம்மையாரின்    இல்லத்தில் இடம்பெற்றுப் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காகச் சுப்பர்மடம் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்படுமென அவரது குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.

(செ. ரவிசாந்)