மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு!

((கனகராசா சரவணன் )

மட்டக்களப்பு இராமகிருஷனமிஷனின் நூற்றாண்டின்; தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக கல்லடிப்பாலத்தடி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 25.05 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை இன்று ஞாயிற்றுக்கிழமை (31); இராமகிருஷ்ணமிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.

மாவட்ட பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான கே. கருணாகரம், இரா.சாணக்கியன், முன்னால் மாவட்ட அரசாங்க அதிபர்களான கே.கருணாகரன், கலாமதி பத்மராஜா, கே.விமலநாதன் உள்ளிட்ட மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன்  உதவி முகாமையாளர் சுவாமி சுரார்ச்சிதானந்த ஜீ மஹராஜ்,

மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள், வர்தகசங்கத்தினர் , மாணவர்கள், பெற்றோர்கள், மாவட்டத்தில் உள்ள திணைக்கள உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதனை தொடாந்து சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை சம்பிரதாய பூர்வமாக திரைநீக்கம் செய்து திறந்துவைக்கப்பட்டது.

You missed