பெரியநீலாவணை NEXT STEP இன், அறநெறி கல்வி ஆன்மீக எழுச்சி நிகழ்வு இன்று பாண்டிருப்பில் இடம்பெற்றது!


பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு மட்டக்களப்பு சிவதொண்டர் திருக்கூடம் அமைப்புடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்ற அறநெறி கல்வி விழிப்புணர்வு ஆன்மீக எழுச்சி நிகழ்வொன்று இன்று (31) பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலையில்இடம்பெற்றது.

நாவலர் அறநெறி பாடசாலை அதிபரும், உதவிக்கல்வி பணிப்பாளரும், நெக்ஸ்ட் ரெப் அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவருமான எம். லக்குணம் ஆசிரியர் தலைமையில் இந் நிகழ்வுமுன்னெடுக்கப்பட்டது.

அறநெறி மாணவர்கள் ஒன்றிணைந்து ஆன்மீக எழுச்சி ஊர்வலமாக சென்றனர். பாண்டிருப்பு ஸ்ரீ முருகன் ஆலயத்திலே சிவ திரு சித்த வித்யார்த்தகே சிசுபாலன் அவர்களின் அறநெறி கல்வி, ஆன்மீக கருத்துரை, தியான பயிற்சி, என்பனவும் நடத்தப்பட்டன.


தொடர்ந்து பஜனை. மற்றும் அறநெறி கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான கருத்துரைகளும் இடம்பெற்றதோடு சமய வினா விடை போட்டிகளும் இடம் பெற்றன. கலந்துகொண்ட மாணவர்கள் சிலருக்கு உருத்திராட்ச மாலைகள் அணிவிக்கப்பட்டதோடு, முன்பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பைகளும் மற்றும் அபியாசக் கொப்பிகளும் வழங்கப்பட்டன.

சமய வினா விடை போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழும் வழங்கப்பட்டன. சுமார் 60 மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றதோடு பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு சார்பாக மகளிர் பிரிவு தலைவி திருமதி மஞ்சுளா சுந்தரலிங்கம் , நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் பொதுச்செயலாளர் வி. கார்த்திக் , நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழகத்தின் உறுப்பினர்கள் அக்ஷயன்,சட்ஷயன், ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கலந்து கொண்டோர் அனைவருக்கும் சத்துணவு வழங்கப்பட்டது. சத்துணவுக்கான அனுசரணையை கல்முனை NET ஊடக வலையமைப்பு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.