தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் சம்மாந்துறை வேம்படி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அப்பியாசா கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் தலைமையில் இடம்பெற்ற கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.