ஊடகவியலாளரின் தந்தை காலமானார்.

மட்டக்களப்பு மாவட்ட சீலாமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு. துஷாரா) அவர்களின் தந்தை த.நடராசா என்றழைக்கப்படும் நவம் நேற்றுக்காலை (03) காலமானார்.

அன்னார், இலங்கை போக்குவரத்துச் சபையின் ஓய்வுநிலை நடத்துனராவார். அவர், கோவில் பரிபாலன சபையின் தலைவராகவும், தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனவுச் சங்கத்தின் செயற்பாட்டாளராக மிக நீண்ட காலம் செயற்பட்டதுடன் தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் முன்னின்று செயற்படும் ஆளுமையுள்ள இரும்பு மனிதனாகவும் திகழ்ந்தார்.

குறிப்பாக, உள்ளூர் மற்றும் உலக நிலவரங்களைக் கூர்ந்து அறியும் அறிவாளனாகவும், அவரது பிள்ளைகளை நன்கு கற்பித்து நல்லாளுமையுள்ளவர்களாக உருவாக்கிய சிறந்த தகப்பனுமாவார்.

You missed