பதவி மோகத்தில் தமிழரசுக் கட்சியை குழியில் தள்ள பின்னப்பட்ட சதி வலை : வெளியாகிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஒன்றிணைந்து ‘அரசியல் சீர்திருத்தப் புலனாய்வு அணியினர்’ என்ற பெயரில் உத்தியோகப்பற்றற்ற அணி ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். அந்த அணியின் தேடலின் போது கண்டறிப்பட்ட சில தகவல்களை அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றார்கள். ‘சொன்னாலும் குற்றத்திற்கும்’ அனுப்பிவைத்துள்ளார்கள்.

அவர்கள் எமக்கு அனுப்பி வைத்த தகவல்களில் சிலவற்றை மாத்திரம் இன்று முதல் தொடர்ச்சியாக இங்கு வழங்குகின்றோம்:

சம்பவம் 1.

ஜனவரி 21 இற்கு சில நாட்களுக்கு முன்னர், வவுனியாவின் புறநகர் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் முன்னே வந்து நின்றது மட்டக்களப்பு ரவுடி நாடாளுமன்ற உறுப்பினர் என்று அறியப்பட்ட ஒருவரின் வாகனம்.

அந்த வாகனத்தில் குடும்பத்தினருடன் ஏறிப் புறப்பட்டார் தமிழரசுக் கட்சியின் அந்தப் பிரமுகர்.

புறப்பட்ட வாகனம் ஈரப்பெரியகுளத்தைத் தாண்டிச்சென்றது அவதானிக்கப்பட்டது.

ஆனால் வாகனத்தின் சொந்தக்காரரின் ஊரான மட்டக்களப்பிற்கும் அந்த வகனம் செல்லவில்லை..

அவரின் வசிப்பிடமான கொழும்பிற்கும் செல்லவில்லை..

அவரின் புகுந்தவீடு கண்டிக்கும் செல்லவில்லை…

தமிழரசுக் கட்சியின் அரசியல் சீர்திருத்தப் புலனாய்வுப்பிரிவு உறுப்பினர்கள் வாகன உரிமையாளர் அடிக்கடி சென்றுவரும் கொழும்பு சங்கரில்லா விடுதியிலும் தேடுதலை மேற்கொண்டும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை…

அந்தப் பிரமுகரை ஏற்றிச்சென்ற வாகனம் அனுராதபுரத்திலுள்ள பிரபலமான விடுதி ஒன்றுக்குச் சென்றிருந்தது பின்னர் தெரியவந்தது.

முதலில் டெங்கு என்றும், பின்னர் நுரையீரல் பிரச்சினை என்றும், சுகவீனம் காரணமாக வெளித்தொடர்புகளின்றித் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும், அதனால் அவரது கட்சியின் பதவிக்கான விடயங்களை ஆற்றமுடியாது என்றும் வெளியே சொல்லப்பட்ட அந்த கட்சி முக்கியஸ்தர், தமிழ் தேசிய நீக்கத்துக்காவென்று களமிறக்கப்பட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் குடும்பத்தோடு சென்று அனுராதபுர விடுதியில் “விடுமுறையைக் கழிக்கத்தொடங்க” கட்சித்தலைமையைக் கைப்பற்றும்நோக்கிலான முதலாவது சதிவலைப்பின்னல் ஆரம்பமாகியது.

சம்பவம் 2:

திருகோணமலையில் தமிழரசுகட்சியின் தீவிர விசுவாசியான இளைஞன் அவன்.

அவனது மூத்த சகோதரன் ‘சைபர்குறூப்’ என்று அந்நாட்களில் அறியப்பட்ட தலைவர் பிரபாகரன் அவர்களின் நேரடிப் பாதுகாப்புபிரிவின் தளபதியான பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்து மாவீரர் ஆனவர்.

தமிழ் தேசியநீக்க அரசியலுக்காகவென்று கொழும்பில் இருந்தும், ஒஸ்ரேலியாவில் இருந்தும், கனடாவில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்ட பரிவாரங்களைக் கடுமையாக விமர்சித்து வந்த அவனுக்கு, கொழும்பிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அழைத்த நபர் அந்த இளைஞனுக்கு அடுத்ததேர்தலில் மூதூர் தொகுதியில் ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் பட்டியலில் போட்டியிட வாய்ப்புத் தருவதாகவும், குகதாசனை எதிர்க்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

‘என்ன ஈ.பி.டி.பியில் ஆசனமா??’.. அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன் திட்டிவிட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

மீண்டும் தொடர்புகொள்ளப்பட்டது. அவனுக்கு பணம் தரலாம் என்று ஊக்கப்படுத்தபட்டது.

அதையும் மறுக்கவே ஜனாதிபதி செயலகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறப்பட்டது.

எல்லாவற்றிக்கும் மறுத்தவனிற்கு கொழும்பு சங்கரில்லா விடுதியில் ” candle night” ஒன்றை அமைத்துத்தருவதாக ஆசைகாட்டப்பட்டது.

அதாவது பெண்களை “அரேஞ்” பண்ணித் தருவதாகக் கூறப்பட்டது. அந்த இளைஞன் அதற்கும் மசியவில்லை

சம்பவம் 3:

தமிழரசுக் கட்சியிலிருந்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ரவிராஜ் அவர்களின் தீவிர ஆதரவான இளைஞன் அவன்.

சட்டத்துறை மாணவனும், ரவிராஜ் அவர்களைத் தொடர்ந்து அவரது மனைவியான சசிகலா ரவிராஜ் அவர்களது வெற்றிக்காகப் பாடுபட்ட தென்மராட்சியிலிருந்து சென்று யாழ் இந்துவில் கல்விகற்ற கவிஞனான அந்த இளைஞனுக்கும், மேலே சம்பவம் 2 இல் சம்பந்தப்பட்ட இளைஞனுக்கு கூறப்பட்ட அதே ஆசை வார்த்தைகள், அதே நபரால் அதே ஒழுங்கில் கூறப்பட்டு, ‘கொழும்பு, ஒஸ்ரேலிய கனடா இறக்குமதிகளை எதிர்க்கவேண்டாம்’ என்று அன்பாகக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கொழும்பிலிருந்து தொடர்புகளை மேற்கொண்டவர், மட்டக்களப்பில் ரவுடி அரசியல் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினரின் சாகா என்பது பின்னால் தெரியவந்தது.

தொடரும் தகவல்கள்….
நன்றி -ibc தமிழ்

You missed