தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழு பறி தொடர்கிறது : நேற்றைய வவுனியா சந்திப்பிலும் முடிவு இல்லை!

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடு நேற்று வவுனியாவில் பிரமுகர்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.

கட்சியின் பதில் செயலாளர் சத்தியமூர்த்தியின் வவுனியா இல்லத்தில் கட்சியின் தலைவர் சிறிதரன் தலைமையில் இடம் பெற்ற இச் சந்திப்பில் குகதாசன், சிறிநேசன், சாள்ஸ் நிர்மலநாதன், அரியநேந்திரன், கோடிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
செயலாளர் பதவியை ஆளுக்கு ஒரு வருடம் பகிர்ந்து கொள்வது தொடர்பாக பேசப்பட்டதாகவும் இதில் யார் முதல் வருடம் செயலாளர் பதவி வகிப்பது என்பது தொடர்பில் இருவருக்கிடையில் இணக்கப்பாடு ஏற்படாத நிலையில் முடிவுகள் எதுவும் இன்றி சந்திப்பு நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவரும்
இரண்டு மூன்று தினங்களுக்குள் தங்களுக்குள் பேசி ஒரு முடிவை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டதாக அறிய முடிகிறது

You missed