கல்முனை ஆதார வைத்தியசாலையில் பொங்கல் விழா வரலாற்று பதிவு நிகழ்வு

உழவர்களின் திருநாளாம் தைபொங்கல் நிகழ்வை முன்னிட்டு, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் நேரடி வழிகாட்டலில்,
இயற்கை வளங்களை கொண்ட ஓர் சூழலை உருவாக்கி  பொங்கல் நிகழ்வு (30) இன்று சிறப்பாக இடம்பெற்றது.

சமூகத்தின் முதுகெலும்பான உழைக்கின்ற உழவர்கள் சூரியனுக்கு நன்றி கூறும் நாளை முன்னிட்டு, உழவர்களை கௌரவிக்கவும்,
மதங்கள் கடந்த ஓர் பண்டிகையாகவும் , வைத்தியசாலையின் பணியாளர்கள் தங்கள் கடமையினால் ஏற்படும் சலிப்பு தன்மையை அவர்களின் மனங்களில் இருந்து களையவும்.
இந் நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்விற்கு  அதிதிகளாக வைத்தியசாலையின் பணிப்பாளர் குண.சுகுணன் , கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சி, மற்றும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஸ்தாபகர் பு.கேதீஸ்,
கிழக்கிலங்கை சொற் பொழிவாளர் சங்கம் சார்பாக தா.பிரதீவன் சோ.டினேஸ்குமார் , சுபாஸ்கர் சிவம், வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், நிருவாக உத்தியோகத்தர், வைத்தியசாலை அனைத்து துறை உத்தியோகஸ்தர்கள், ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பு சொற்பொழிவை சொற்பொழிவாளர்கள் சங்கம் சார்பாக சோ.டினேஸ்குமார் நிகழ்த்தினார்.

பண்பாட்டு உடை அணிந்து சேவையாளர்கள் பங்கு பற்றிய ஒரு சிறப்பு நிகழ்வாக இது இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பணிப்பாளர், உரையாற்றுகையில்,

இந்த நிகழ்வு ஓர் ஆசீர்வாதம் பெற்ற நிகழ்வாக வானவர்கள் மனமகிழ்ந்து இயற்கை மழைத் தூவல்களை பொழிந்து கொண்டதாகவும்.
தமிழர்களின் ஆரம்ப வரலாற்றை அறிய முடியாத வரலாற்று தொன்மை கொண்ட  எமது இப் பொங்கல் விழா அனைத்து மத சமத்துவத்துடன் இடம்பெறுவது.
இங்கு எமது சேவையானது ஒரு பொது நிறுவனமாக எந்த பாரபட்சமுமின்றி ஒரு சேவை நிலையமாக திகழ்கின்றது என்பதை உணர்த்தி நிற்கிறது
என்று கூறினார்.

நன்றியுரையை தாதிய உத்தியோகஸ்தர் ஜெயகரன் தமிழ் மணம் கமழ உணர்வு பூர்வமாக கூறி முடித்தார்.