களுத்துறை நகர் ஹப்பி முன்பள்ளி மாணவர்களின் சுதந்திர தின நடைபவனி

(கலைஞர்.ஏ.ஓ.அனல்)

இன்றைய சிறுவர்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கு ஐக்கியம் ஒற்றுமை சமாதானம் நிறைந்த சுதந்திர இலங்கை தொனிப்பொருளில் களுத்துறை நகர் ஹப்பி முன்பள்ளி மாணவர்களின் சுதந்திர தின நடைபவனி 4/2/2024 ஆம் திகதியன்று இடம்பெற்றது.

ஹப்பி முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்களின் ஏற்பாட்டில் தலைமை ஆசிரியர் M.N.F. நுஸ்ரா ( M.N.F.Nusra ) தலைமையில்
நடைபெற்ற இவ் நடைபவனியில் முன்பள்ளி மாணவர்கள் உற்சாகமாக கலாசார உடையணிந்து தேசியக்கொடியை கையிலேந்தி களுத்துறை பிரதான வீதிவரை நடைபவனியாக வலம் வந்தனர்.

சுதந்திர நடைபவனியின் போது பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்ததோடு மாணவர்களுக்கு இனிப்பு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி வரவேற்றனர்.

இந் நிகழ்வில் விசேட அம்சமாக நான்கு மதங்களையும் பின்பற்றும் இருமொழி பேசும் சின்னம் சிறுசுகள் இந்த முன்பள்ளியில் கல்வி கற்கின்றனர் இம் மாணவர்கள் ஒவ்வொருவரும் தம்முடன் கல்வி கற்கும் சக மாணவர்களின் பாரம்ரிய மத கலாசார உடையணிந்து தம்மை நல்லிணக்கத்திற்காண பிள்ளைகளாக பிரதிபலித்து நாட்டுக்கு தேவையான இனமொழி வேறுபாடில்லாத ஐக்கியத்தை வலியுறுத்தினர்.