சுவிஸ் விஜியகுமாரன் தம்பதியால் சமத்துவ மக்கள் நல ஒன்றியம் ,அஹிம்சா நிறுவங்கள் ஊடாக வீடு கையளிப்பு .

பெரியநீலாவணை பிரபா

புலம்பெயர் தேசத்தில் இருந்து செயற்பட்டு வருகின்ற சமத்துவ மக்கள் நல ஒன்றியம் பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் வந்தாறுமூலை மேற்கு பகுதியில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய இரண்டு பெண் பிள்ளைகளைக் கொண்ட ரவீந்திரன் நிலாளினி குடும்பத்திற்காக புதிய வீடு ஒன்று அமைத்து நேற்று (28) அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் பணிப்பாளர் சமூகபற்றாளர், சமூக ஜோதி விஜியகுமாரன் அவரது துணைவியார் திருமதி குபேரலெட்சுமி விஜியகுமாரன், ஆகியோரின் நிதி பங்களிப்பில் மட்டக்களப்பு அஹிம்சா நிறுவனத்தின் வீடமைப்பு திட்டம் மூலம் 71 வது வீடாக நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது.

வீடு கையளிக்கும் நிகழ்வில் சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் சார்பாக அதன் தாயக துணைத் தலைவர் உதவி கல்வி பணிப்பாளர் .மா. லக்குணம் மற்றும் சில கள உதவியாளர்களும், வந்தாறுமூலை பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் . சுதாகரன் ,, அஹிம்சா நிறுவனத்தின் தலைவர் t வி. விஜயராஜா அவர்களும் மற்றும் பல அதிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் பணிப்பாளர் . விஜியகுமாரன் அவர்களின் துணைவியார் திருமதி குபேர லட்சுமி விஜியகுமார் அவர்களின் பிறந்த தினமான நேற்றைய தினத்தில் . வீடு அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.