இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த சி.சிறிதரன், எம் .ஏ.சுமந்தரன், சீ.யோகேஷ்வரன் ஆகியமூவரும் இன்று(11/01/2024) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெல சிறிதரன் விடுதியில் கூடி பேசினர்.

எவருமே வேட்பாளர் தெரிவில் இருந்து ஒருவருக்கு விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அவரவர் பக்க நியாயங்களை கதைத்தனர் எனவே எதிர்வரும் 21/01/2024,ல் திருகோணமலையில் பொதுக்குழு கூட்டத்தில் ஜனநாயமுறையில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.