கிஷோ

சேனநாயக்க சமுத்திரத்தின் கொள்ளளவு இன்று பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி 750,000 acft ஐ எட்டியுள்ளது. தற்போது நிலவும் மழை நிலைமையின் படி, அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் இது முழு விநியோக அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று மாலை முதல் கசிவுநீர் வெளியேற்றம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் கல் ஓயாவின் கீழ்பகுதிகளில் இயங்கும் வாகன சாரதிகள் வெள்ளத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக பொல்வத்தை, பழலந்த, இறக்காமம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை மற்றும் ஒலிவில் தென்கிழக்கு பல்கலைக்கழகப் பிரதேசத்தின் தாழ்வான பிரதேசங்களை அண்மித்த மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதி பணிப்பாளர் மு.ரியாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.