18, ஆண்டு இன்று…..‼️

பாலன் பிறந்த நாளில்…
காலன் எடுத்த கதை..!
ஈழக்குரல் ஒன்று…!
இல்லாமல் போனதுவே..!

மானத்தமிழினத்தின்..!
மாமனிதர் ஜோசப்ஐயா..!
ஈனப்பிறவிகளின் இலக்கால்..!
இரையானார் எம்மண்ணில்..!

இரண்டாயிரத்து ஐந்து ஆண்டு..!
நத்தார் நன்னாள் ஆராதனையில்..!
நயவஞ்சகனின் துப்பாக்கி..!
நல்ல மனிதரை பலியெடுத்தது.!

பதினெட்டு ஆண்டு இன்று..!
நீதி இல்லை அவர் கொலைக்கு..!
பாரினிலும் முறையிட்டும்..!
பாதகர்கள் சிக்கவில்லை..!

இனவாத ஆட்சிசெய்யும்.. !
இந்த நாட்டின் சதிகளிலே..!
அனைத்துலக சமூகமுமே..!
ஆதரவு கொலைஞனுக்கே..!

இறை நீதி கிடைத்தாலே.!
இருள்நீங்கி் ஒளி தெரியும்..!
ஈழத்தின் தமிழர் நிலம்..!
ஓர் நாளில் விடியும் விடியும்..!

-அம்பிளாந்துறையூர் அரியம்-