அரசு ஊழியர்களுக்காக விடுமுறைகளை குறைக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய ஆண்டுக்கு 42 உள்ள சாதாரண மற்றும் ஓய்வு விடுமுறையின் எண்ணிக்கையை 25 நாட்களாக குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட விதிகளை மறுசீரமைக்க ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.டயஸ் திறந்த மற்றும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

சாதாரண விடுமுறை நாட்களை 10 ஆகவும், ஓய்வு விடுமுறை நாட்களை 15 நாட்களாகவும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் | Public Holidays Government Employees Sri Lanka