சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் கடமையேற்பு!

அபு அலா

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் (18) சுகாதார அமைச்சின் கடமையை பொறுப்பேற்றார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டு, இன்றைய தினம் சுகாதார அமைச்சில் கடமையேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.