கல்முனை பிராந்திய மக்கள் சார்பாக தமிழ் இளைஞர் சேனை முன்வைக்கும் கேள்விகள்!

பொது மக்களின் கேள்விகள்

  1. கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலக பிரிவு சுமார் 39,000 சனத்தொகையையும் 29 கி.உ பிரிவுகளையும் 06 பாரம்பரிய தமிழ் கிராமங்களையும் உள்ளடக்கியதான ஒரு பி.செ பிரிவாகும்.

இந்நிர்வாக அலகானது 1989ம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்த்தாபிக்கப்பட்டது
பின்னர் 93/600/034 இலக்க 93.03.17 ம் திகதிய 93/600/034 (ஐ) இலக்க 93.03.31 திகதிய அமைச்சவரை மசோதாக்கள் மற்றும் 93.07.09ம் திகதிய அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 93.07.28ம் திகதி அமைச்சரவையின் அனுமதியுடன் பிரதேச செயலகமாக மாற்றப்பட்டது.

அதனடிப்படையில் தனியானதொரு பிரதேச செயலக பிரிவாக 30 வருடங்களுக்கு மேலாக பொது மக்களுக்கான சேவைகளை வழங்கிவருகின்றது.

கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றதாக அறிகின்றோம்.

1.1. கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை (தெற்கு) பிரதேச செயலக பிரிவின் “உப அலுவலகம்” ஒன்றாக தரமிறக்குவதற்கான தீர்மானமொன்று அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதா?

1.2. கேள்வி 1.1 இற்கான பதில் “ஆம்” எனில் அதற்கான அமைச்சரவை பத்திரத்திரத்தின் விபரங்களை வழங்கவும் (அமைச்சரவை பத்திர இலக்கம், திகதி, தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட கூட்ட திகதி போன்றன)

1.3. கேள்வி 1.1 இற்கான பதில் “இல்லை” எனில் எதன் அடிப்படையில் இந்த விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன?

1.4. பிரதேச செயலமொன்றை “உப அலுவலகமாக” தரமிறக்குவது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமொன்றுக்கு எதிரான தீர்மானமொன்றை அமைச்சின் செயலாளரினால் அல்லது அரச அதிகாரி ஒருவரினால் மேற்கொள்ள முடியுமா?

1.5, கேள்வி 1.4 இற்கான பதில் “ஆம்” எனில் அதன் சட்ட வலிதுடமை தொடர்பான விளக்கத்தை ஆரதங்களுடன் வழங்கவும்

  1. 嗎 பிரதேச செயலக பிரிவுக்காக நியமிக்கப்படும் பிரதேச செயலாளர் தான் நியமிக்கப்பட்டிருக்கும் பிரிவிற்கு அப்பால் தனது அதிகாரங்களை பிரயோகிக்க முடியாது. இருந்தபோதிலும் கல்முனை (தெற்கு) பிரதேச செயலாளர் தனது அதிகாரங்களை கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினுள் எதுவித சட்ட அங்கீகாரமும் இன்றி பிரயோகித்துவருகின்றார். இது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட சட்ட விரோத நடவடிக்கை ஒன்றாகும் (ultra vires).

2.1. எதன் அடிப்படையில் இந்நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது?

  1. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 1993/94 காலப்பகுதியில் தனியான ஆளணி திறைசேரியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்துவதற்காக பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஏனைய மத்திய, மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கென பிரத்தியேகமாக ஆளணிகளை உருவாக்கியுள்ளனர். அதனடிப்படையிலேயே அன்றிலிருந்து இன்றுவரை நியமனங்கள், இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. தற்போது உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தா. நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர், சமூர்த்தி முகாமையாளர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர் போன்ற பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக 300 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் பிரதான பதவிகளான பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை.

3.1. ஆளணி அங்கீகாரம் இல்லாமல் நியமனங்கள் இடம்பெறலாமா?

3.2. “பிரதேச செயலாளார்” மற்றும் “கணக்காளர்” ஆகிய பதவிகள் உள்ளடக்கப்படாமல் பிரதேச செயகலமொன்றுக்கு ஆளணி அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்குமா?

3.3 கேள்வி 3.2 இற்கான பதில் “ஆம்” எனில் அதற்கான நியாயப்படுத்தல்களை வழங்கவும்.

3.4. கேள்வி 3.2 இற்கான பதில் “இல்லை” எனில் பிரதேச செயலாளர், கணக்காளர் ஆகிய பதவிகளுக்கான வெற்றிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை?

  1. இலங்கையில் காணப்படும் பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளில் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. இலங்கையில் நடைமுறையில் இருக்கின்ற பிரதேச செல்யக பிரிவுகளும் வர்த்தமானிப்படுத்தப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

4.1. வர்த்தமானிப்படுத்தப்படாத பிரதேச செயலகங்கள் எந்தச் சட்டத்தின் அடிப்படையில் முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகங்களாக தொழிற்பட்டுவருகின்றன?

  1. பல பிரதேச செயலக பிரிவுகள் அவை ஸ்தாபிக்கப்பட்ட போது வர்த்தமானிப் படுத்தப்படவில்லை. மாறாக காலம் கடந்தே வர்த்தமானிப் படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, இறக்காமம் பிரதேச செயலக பிரிவு – அம்பாரை மாவட்டம் 1999ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டபோதிலும் 2009ம் ஆண்டிலேயே வர்த்தமானிப் படுத்தப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவு அம்பாரை மாவட்டம் 2002ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டபோதிலும் 2006ம் ஆண்டிலேயே வர்த்தமானிப் படுத்தப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவு மட்டக்களப்பு மாவட்டம் 1993ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டபோதிலும் 1998ம் ஆண்டிலேயே வர்த்தமானிப் படுத்தப்பட்டுள்ளது.

இரத்மலான பி.செ பிரிவு கொழும்பு மாவட்டம், வெலிப்பிட்டிய, பிட்டபத்தர பி.செ பிரிவுகள்
களுத்துறை மாவட்டம், ஒக்கேவல பி.செ பிரிவு
ஹம்பாந்தோட்ட மாவட்டம், டன்கொட்டுவ, மாதம்பே, உடுபத்தர, மகாகும்புகடவல பி.செ பிரிவுகள்

புத்தளம் மாவட்டம். அலவ்வ, குளியாப்பிட்டிய கிழக்கு, கனேவத்த, மல்லவாப்பிட்டிய, கொட்டவெஹர பி.செ பிரிவுகள் –
குருணாகல மாவட்டம், பளுகஸ்வெவ, விலாச்சிய பி.செ பிரிவுகள்
அநுராதபுரம் மாவட்டம், கஹவத்த, ஓபநாயக்க, எலபாத்த பி.செ பிரிவுகள் ரத்தினபுரி மாவட்டம், காரைதீவு,
கல்முனை பி.செ பிரிவுகள் அம்பாரை மாவட்டம் போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் 2001 ஆம் ஆண்டிலேயே வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளன.

5.1. மேற்படி பிரதேச செயலக பிரிவுகள் அவை ஸ்தாபிக்கப்பட்டது முதல் வர்த்தமானிப்படுத்தப்பட்ட திகதி வரையான காலப்பகுதியில் எந்த சட்டத்தின் அடிப்படையில் பிரதேச செயலகங்களாக தொழிற்பட்டன?

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு அரசாங்க அதிபரோ அமைச்சின் செயளாளரோ பதில் எதனையும் வழங்கவில்லை. தற்போது குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பானது நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் அரசாங்க அதிபரின் மிகக் கீழ்த்தரமான செயல் ஒன்று அரங்கேறியுள்ளது.

அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கு அமைய உப பிரதேச செயலகம் எனக் குறிப்பிட்டு பிரிவின் வரைபடங்கள் கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

2022-01-25 ம் திகதிய 2264/8 எனும் இலக்க அரச வர்த்தமானி ஊடாக தொகைமதிப்பு பிரிவுகளை குறிப்பிடும் போது எமது பிரதேச செயலகமானது பிரதேச செயலகம் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆகவே சட்டத்திற்கு புறம்பாக ஏதோ ஒரு சாராரை திருப்தி படுத்தும் நோக்கில் செய்யப்படும் இந்த வேலைத் திட்டத்தை கல்முனை வாழ் மக்களாகிய நாம் புறக்கணிப்பு செய்து எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்.

தமிழ் இளைஞர் சேனை
கல்முனைப்பிராந்தியம்