13 வருட மாகாண ஆணையாளர் சேவையை பாராட்டி கௌரவிப்பு

அபு அலா –

கடந்த 13 வருடங்களாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக கடமையாற்றி வருகின்ற மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களின் சேவைகளைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை மண்டபத்தில் நேற்று (07) இடம்பெற்றது.

ஏறாவூர் மாவட்ட ஆயுள்வேத நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கெளரவிப்பு நிகழ்வு, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம்.லாபீர் தலைமையில் இடம்பெற்றபோது, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஏறாவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.