அரிநேத்திரனுக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் வழக்குத்தாக்கல்!

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேச்சல்தரைகளில் அத்துமீறி காணி அபகரிப்பு மேற்கொள்ளும் வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை வெளியேற்றுமாறு கால்நடைப்பண்ணையாளர்கள் கடந்த 08/10/2023, ல் மட்டக்களப்பு கொம்மாதுறையில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதற்கு எதிராக ஏறாவூர் பொலிசார் நீதிமன்றில் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கின் முறி (Bond) பத்திரத்தில் பையொப்பம் பெற்று விசாரணை செய்வதற்காக வவுணதீவு பொலிசார் ப.அரியநேத்திரன் அவர்களின் அம்பிளாந்துறை வீட்டில் சென்று முறைப்பாட்டை பதிவு செய்ததுடன் அதற்கான வழக்கு எதிர்வரும் 2023, நவம்பர்,17,ம் திகதி ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் உள்ளதால் அதில் செல்லுமாறும் பணித்துள்ளனர்.

கடந்த 08/10/2023,ல் ஜனாதிபதி ரணில் விக்கி்மசிங்கா செங்கலடி மத்திய மகாவித்தியாலயத்தின் 149, வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள சென்றபோது அவரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக ஏறாவூர் பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்

இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட மேலும் 35, க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக அரியநேத்திரன் கருத்துக்கூறுகையில் காவி உடை தரித்து மட்டக்களப்பு பிக்கு அம்பிட்டிய தேரர் போல் சண்டித்தனம் புரிந்திருந்தால் தமக்கு இந்த நிலை வந்திராது என கூறினார்.