மாட்டைக்கொல்லும் மனிதா..‼️

அம்பிளாந்துறையூர் அரியம்-

மாட்டைக்கொல்லும் மனிதா..!
உன் மனதில் உள்ளது கல்லா…!
வாய் பேசா சீவனை வதைக்கிறாய்..!
வந்தேறு குடியே நீ மிதிக்கிறாய்..!

மயிலத்தமடு உன் பாட்டன் பூமியா..!
மாதவனை உன் அப்பன் காணியா..!
கெவிளியாமடு உன் பரம்பரை சொத்தா..!
மேச்சல் தரை எல்லாம் உன் வீட்டுச்சீதனமா!

ஆற்றிவு உள்ளவனே ஆணவத்தை காட்டதே!
ஆக்கிரமிப்பு செய்து அனியாயம் பண்ணாதே!
புத்தரின் சிலையை புல்தரையில் வைக்காதே!
புனித மதத்தை பொல்லாங்கு செய்யாதே!

கால் நடைகள் மேய காணிகளை விட்டு விடு..!
காவி உடை ஆசாமிகளே கண் திறந்து பாரு!
கூவி கூச்சலிட்டு கூலிக்கு மார் அடியாதே..!
பசு எருமை மாடுகளை பசியை தடுக்காதே..!

-அம்பிளாந்துறையூர் அரியம்-

You missed