வாசிப்பு வாரத்தை முன்னிட்டு  பிரபல்யமான   கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு 

(பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டம் கல்முனை  கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் வாசிப்பு வாரத்தை முன்னிட்டு  இன்று  விசேட காலை ஆராதனை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு சர்வதேசபுகழ்  பெற்ற பிரபல்யமான கவிஞர் சோலைக்கிளி அதீக்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி சொற்பொழிவாற்றினார் .

தொடர்ந்து மாணவர்களின் கையெழுத்துப் சஞ்சிகைகளையையும் அவதானித்துடன் நூலகப்புத்தகங்களையும் பார்வையிட்டதோடு எதிர்காலத்தில் சிறுவர் நூலகம் ஒன்றை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் பாடசாலையின்  இ.பி.எஸ்.ஐ   இணைப்பாளர் ஏ.றாசிக்   பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள்  பாடசாலை ஆசிரியர்கள்இஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பழையமாணவர்கள்இபெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.