புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் நேற்று (11) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தடையை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You missed