(வி.ஸீனோர்ஜன்)

பெரிய நீலாவணை இந்து மயானத்துக்கான சுற்று மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பெரிய நீலாவணை இந்து மயான அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரியநீலாவணையைச் சேர்ந்த எஸ்.யோகராசா மற்றும் கே. மகாலிங்கம், மற்றும் பெரிய நீலாவணை பொதுமக்களின் நிதி உதவி கொண்டு சுற்றுமதில் அமைக்கப்பட உள்ளது.

பெரிய நீலாவணை ஆலயங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்திருந்தனர். ஏற்கனவே பெரிய

நீலாவணை நெக்ஸ்ட் ரெப் அமைப்பின் அனுசரணையோடு அமரர் நவரெத்த்தினம் அவர்களின் நினைவாக இறுதி அஞ்சலி மண்டபமும் அமரர் ஏரம்பு தங்கமணி தம்பதிகளின் நினைவாக உள் நுழையும் பாதையும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
பெரியநீலாவணை V.ZEENORJAN (வி.ஸீனோர்ஜன்)