இலங்கை கிருஷ்ண பக்தி கழகத்தால் பாண்டிருப்பில் இடம் பெற்ற கிருஷ் ஜென்மாஷ்டமி நிகழ்வு!

பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கை கிருஷ்ண பக்தி கழக ஆலயத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலயத்தில் கடந்த 17 ஆம் திகதி சிறப்பாக இடம் பெற்றது.

இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு ஆன்மீக நிகழ்வுகள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

மாலை 4 மணிக்கு பஜனை ஆரம்பித்து தொடர்ச்சியாக கிருஷ்ண கதா சொற்பொழிவு, நாடகம், ஆராத்தி வழிபாடு, பிரசாதம் வழங்கல் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
கடந்த 31.08.2023 அன்று பாண்டிருப்பில் உள்ள ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் வலராமர் அஷ்டமி நிகழ்வும் சிறப்பாக இடம் பெற்றது.

கிருஷ்ணர் பக்திக்கழகத்தின் பாண்டிருப்பு நிலைய தலைவர் வ. புஸ்ப்பராஜா,செயலாளர் வரதராஜன் பொருலாளர் … மகேந்திரன் மாக்ஷபிரவு எனைய நிருவாக உறுபினர்கள், பக்தர்களின் ஒத்துழைப்புடன் இவ்வாறு விசேஷட பூசைகள் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You missed