தாய்ப்பால்லூட்டல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு!

தாய்ப்பாலூட்டல் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 09.08.2023 அன்று வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கர்ப்பினி தாய்மார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் Dr.J. மதன் அவர்கள் தாய்ப்பாலூட்டல் தொடர்பான விரிவுரை இடம் பெற்றதுடன் தாய்ப்பாலூட்டல் சம்பந்தமான கானொளி வைத்தியசாலையின் தாய்ப்பாலூட்டல் முகாமைத்துவ பிரிவின் குழுவினரால் வழங்கப்பட்டது.