மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்று வெளிவந்த கதையால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் சீற்றமடைந்துள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. அவர் மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்று கதை பரவி வருகின்றது.

அவர் பதவி விலகிய தினமான மே 9 ஆம் திகதி மீண்டும் பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டது.

இது தொடர்பில் ஜனாதிபதி காரியாலய அதிகாரிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விசாரித்தனர். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. “இதை விட்டுவிட்டு இருக்கின்ற வேலையைப் போய் பாருங்கள்” என்று கூறியுள்ளார் ரணில். – என்றுள்ளது.