பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தவேந்திரன் மதுஷிகன்–

(கனகராசா சரவணன்)

இந்தியாவின் தனுஸ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையிலான 30 கிலோமீற்றர் நீளம் கொண்ட பாக்கு நீரினையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தவேந்திரன் மதுஷிகன் நேற்று ஞாயிற்றுகக்கிழமை (28) 13 மணித்தியாலயத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

கடல் பாதுகாப்பை ஊக்குவித்தல் மற்றும் கடலில் ஏற்படும் பொலித்தீன் மாசுபாடு குறித்தான பொது விழிப்புணர்வினை மக்களிடையேயும் இன்றைய இளைஞர் சமூதாயத்திடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாக்கு நீரிணையை நீந்திகடக்கும் முயற்சியை ஜனாதிபதி சாரணர் விருதை பெற்ற மாணவன் மேற்கொண்டார்.

இதனடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு; இலங்கை தலை மன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஸ்கோடி நோக்கி படகில்; சென்ற அவர் அங்கிருந்து நள்ளிரவு ஒரு மணியளவில் நீந்த தொடங்கியவர் தொடர்ச்சியாக 14 மணித்தியாலங்கள் நீந்தி தலைமன்னார்வரை நேற்று பிற்பகல் 3.05 வந்தடைந்த இவருக்கு புதிய சோழன் உலக நிறுவனம் சாதனையை அறிவித்து மாணவனுக்கு நினைவு சின்னமும் வழங்கி கௌரவித்தது.

இந் நிகவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மன்னார் அரசாங்க அதிபர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் சாதனை மாணவனின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்..