இலங்கைத் தபால் திணைக்களம் கடந்த ஆண்டு 7 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது.

தபால் திணைக்களத்தின் வருமானம் 9.3 பில்லியனாக அதாவது 29.6 வீதத்தினால் உயர்வடைந்தாலும் செயற்பாட்டுச் செலவுகள் 15.3 வீதத்தினால் உயர்வடைந்த காரணத்தினால் இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு தபால் திணைக்களத்தின் நட்டம் 7.2 பில்லியன் ரூபா எனவும், கடந்த 2022ம் ஆண்டு நட்டம் 7 பில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பல பில்லியன் ரூபா நட்டம்

தொலைதொடர்பு கட்டணங்கள், உள்நாட்டு தபால் கட்டணங்கள், வெளிநாட்டு தபால் கட்டணங்கள் கடந்த ஆண்டில் உயர்த்தப்பட்டது. எனினும் தபால் திணைக்களத்தின் நிதி நிலைமை பலவீனமாக காணப்பட்டதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.கட்டண மறுசீரமைப்பு, நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல் உள்ளிட்ட சில பரிந்துரைகளின் மூலம் நிதி நிலைமையை ஸ்திரத்தப்படுத்த முடியும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.